அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்குவோம் என அடம் பிடிக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கணினி பிழையை திருத்தாமல் இருப்பதால், கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகள் தவிக்கின்றனர்.
கொள்முதல்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், நுகர்பொருள் வாணிப கழகத்தினர், 65 நெல் கொள்முதல் நிலையங்களை (paddy procured stations)துவக்கி உள்ளனர். இந்த கொள்முதல் நிலையங்களுக்கு, விற்பனைக்கு எடுத்து வரும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், வட்டார வேளாண் துறையினர் பரிந்துரையின்பேரில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதில் ஒரு ஏக்கருக்கு, 80 கிலோ எடை உடைய 30 நெல் மூட்டைகளுக்கு மேல், வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் மகசூல் பெறும் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தென்னேரி, சிட்டியம்பாக்கம், கோவிந்தவாடி, பரந்துார், வாலாஜாபாத் ஆகிய குறு வட்டங்களைச் சேர்ந்த, கூடுதல் மகசூல் (Yield) பெறும் விவசாயிகள், 30 மூட்டைகளுக்கு மேற்பட்டவற்றை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மேலும் படிக்க
2 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி: 90% பணிகள் நிறைவு!
நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்
Share your comments