1. செய்திகள்

வேகமாக பரவும் பறவை காய்ச்சல்! தமிழக மக்களே உஷார்!!

Poonguzhali R
Poonguzhali R
Fast-spreading bird flu! People of Tamil Nadu beware!!

திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆமூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெருங்குழி பகுதியில் தனியாருக்கு உரிய கோழி, வாத்துப் பண்ணை இருக்கிறது. இந்நிலையில், இந்த பண்னையில் வளர்க்கப்பட்ட கோழிகளும், வாத்துகளும் கூட்டம் கூட்டமாக திடீரென இறந்து வருகிறது. இது பறவை காய்ச்சலால் ஏற்பட்டிருக்க கூடும் எனக் கூறப்படுகிறது.

தனியாருக்கு சொந்தமான பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்துகள் கூட்டம் கூட்டமாக திடீரென இறந்து வருவதைத் தொடர்ந்து அதன் ரத்த மாதிரிகளை பரிசோதனைச் செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பறவை காய்ச்சல் இருக்கு எனக் காணப்பட்ட கோழிப்பண்ணையைச் சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகள் வாத்துகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பறவைகள் ஆகியனவற்றை அங்கு இருக்கக் கூடிய அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பறவை காய்ச்சல் எதிரொலியாக அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கேரளாவிலிருந்து கோழி இறைச்சிகள் கோழிகள் உரம் தீவனம் முட்டை ஆகியவை விற்பனைக்காக அல்லது கறிக்கோழிக்காக கொண்டு வருவப்படுவதற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாகக் குமரி கேரளா எழுச்சியான களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடிகளில் இன்று முதல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றதாகத் தகவல்கள் வெளியாகின்றன. குமரி மாவட்ட எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் வாத்து பண்ணைகள் கால்நடை வளர்ப்பு பண்ணைகளில் எல்லாம் கால்நடை அதிகாரிகள் சென்று குழு குழுக்களாகச் சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியாகி இருக்கிறது.

இந்த பறவை காய்ச்சல் வருகையால் தமிழகப் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடிக்கடி பண்ணை இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், சரியான ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் எளிய லட்டு ரெசிபி!

Aavin: ஆவின் பணி நியமனத்தில் புதிய அறிவிப்பு: பால்வளத்துறை அதிரடி

English Summary: Fast-spreading bird flu! People of Tamil Nadu beware!! Published on: 10 January 2023, 03:29 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.