கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கும் நோக்கில் பணிகளைத் தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் விமான ஓடுதள பாதையினை ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம் அமைப்பதற்கு என அனைத்துப் பணிகளையும் தமிழக அரசு தற்பொழுது தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான செய்தி அறிக்கையில், கோவில்பட்டியில் பறக்கும் பயிற்சி அமைப்பினை நிறுவுதலுக்கான ஆன்லைன் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க திட்டமிட்டு இருப்பதைத் தொடர்ந்து பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை டிட்கோ கோரி இருக்கின்றது. இதார்கு என https://tidco.com & http://www.tntenders.gov.in என்ற இணையதளங்களில் இருந்து டெண்டரைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை, விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என முன்பிருந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக விமான ஓடுதள பாதையை மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்த் நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுனர்கள், விமான ஓடுதள பாதையினை ஆய்வு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சென்னை 2-வது மலர் கண்காட்சியின் சிறப்பம்சங்கள்!
5 நிமிடங்களில் மண் பரிசோதனை: இனி 15 நாட்கள் காக்க வேண்டியதில்லை!
Share your comments