மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ரேஷன் கடைகளில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு அரசின் தரப்பிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கு முன்பணமாக ரூ.200 கோடி ஒதுக்கித் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின்பொழுது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விலையி இல்லாமல் வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வேட்டி சேலை வழங்குகின்ற திட்டத்திற்காக ரூ. 200 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் அரசாணையில், வருகின்ற 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 1,63,00,000 வேட்டிகள் உற்பத்தி திட்ட இலக்காக நிர்ணயம் செய்து வழங்கிட ஆணையானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் முதலியோர் உள்ளடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் வேட்டி சேலைகள் பயனாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, ரேஷன் கடைகளின் விற்பனை மையத்தில் (Point of Sale Machine) வேட்டி சேலைகளை வழங்கும்பொழுது விரல் ரேகை பதிவு (Bio metric Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
திடீரென அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து! விவசாயிகள் மகிழ்ச்சி!
விவசாயிகளால் தொடங்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்! புதுவை விவசாயிகள் அசத்தல்!!
Share your comments