இலவசமாக ரேஷன் வழங்கும் மத்திய அரசின் முடிவைப் போலவே, இலவசமாகத் தொலைகாட்சி பார்க்கும் வசதியை அளிக்கிறது மத்திய அரசு. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய மத்திய அரசு பல்வேறு வசதிகளைச் செய்து வருகின்றது. அதைத் தொடர்ந்து இலவசமாக டிவி பார்க்கலாம். உங்கள் டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன், அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது. இலவசமாக ரேஷன் வழங்கும் மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, இலவசமாக தொலைகாட்சி பார்க்கும் வசதியை அளிக்கும் மத்திய அரசு இதற்கான செலவை ஏற்கிறது எனவும் கூறப்படுகிறது.
இலவச உணவு தானியங்கள் வழங்குவதுடன், தற்பொழுது டிஷ் டிவியையும் இலவசமாக வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது. தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் இந்த பெரிய முடிவை எடுத்து இருக்கிறது.
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் நிலையை மேம்படுத்த ரூ.2,539 கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. யார்யாருக்கு இந்த இலவச டிஷ் கிடைக்கும் என்று பார்த்தால், நாட்டின் தொலைதூர, எல்லை மற்றும் பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக டிஷ் வசதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 7 லட்சம் மக்களுக்காக இலவச டிஷ்கள் நிறுவப்படும். இந்த திட்டத்தின் மூலம் டிடிஎச் சேவையை விரிவுபடுத்துவதே மத்திய அரசின் திட்டம் ஆகும்.
இதனுடன், தூர்தர்ஷன் மற்றும் ஆல் இண்டிய ரேடியோவில் உள்ள பழைய ஸ்டுடியோ உபகரணங்கள் மற்றும் OB வேனை முழுமையாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் செய்திக்குறிப்பில் அரசின் இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் வேலை வாய்ப்பும் பெருகும் என்று அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதனுடன், உள்ளடக்கத்தின் தரமும் மேம்படுத்தப்படும் எனவும், நாடு முழுவதும் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
தூர்தர்ஷனில் பெரிய மாற்றங்களுடன், வீடியோ தரத்தையும் அரசாங்கம் மேம்படுத்தும். இதனுடன், பழைய டிரான்ஸ்மிட்டர்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை நிறுவுவதாகவும், பழைய டிரான்ஸ்மிட்டர்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க
Aadhar: ஆதார் கார்டில் ஈசியா அப்டேட் செய்யலாம் - புதிய வசதி!
சென்னையில் கூடுதலாக 20 புதிய பேருந்து சேவை! சென்னைவாசிகள் மகிழ்ச்சி!
Share your comments