1. செய்திகள்

தங்கம் வாங்கும் பொதுமக்களே: இனி இதைப் பார்த்து தான் வாங்கனும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Gold Buying Hallmark

தங்க நகைகளை விற்பனை செய்வதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, தங்க நகைகளில் ஹால்மார்க் அடையாள எண் (HUID) இருந்தால் மட்டுமே அந்த நகைகளை விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விதிமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வருகிறது. இந்த ஹால்மார்க் அடையாள எண் என்றால் என்ன? இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்? இதை தங்கம் வாங்கும்போது எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

ஹால்மார்க் அடையாள எண்

ஹார்மால்க் அடையாள எண் (HUID) என்பது Hallmark Unique Identification. தங்க நகைகளுக்கு பிஐஎஸ் (BIS) ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அவ்வகையில், ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளில் இந்த ஹால்மார்க் அடையாள எண் இருக்கும். ஹால்மார்க் அடையாள எண் என்பது 6 இலக்க தனித்துவமான அடையாளம். ஒவ்வொரு நகையிலும் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படும்போது அதற்கு தனித்துவமான 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண் பதிக்கப்படும். ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட எல்லா நகைகளிலுமே இந்த ஹால்மார்க் அடையாள எண்ணும் இருக்கும்.

எனவே, நீங்கள் தங்க நகை வாங்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதாது. அதில் 6 இலக்க ஹால்மார்க் அடையாளமும் (HUID) இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுவது அந்த தங்கத்தின் தரத்தையும், தூய்மையையும் உறுதி செய்கிறது. எனவே, பொதுமக்களின் உரிமைகளையும், தங்கத்தின் தரத்தையும் உறுதி செய்ய ஹால்மார்க் அடையாள எண் பதிக்கப்பட்ட நகைகளை மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹால்மார்க் போலிகள்

சில தங்க நகைகளில் போலியான ஹால்மார்க் முத்திரையும் பதிக்கப்பட்டிருக்கலாம். இதை சரிபார்ப்பதற்கு உங்கள் மொபைலில் BIS Care App டவுன்லோடு செய்யவும். அதில் நகையில் HUID வைத்து சரிபார்த்துக்கொள்ளலாம். போலி என தெரியவந்தால் நீங்கள் நகை வியாபாரிக்கு எதிராக புகாரும் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்: விரைந்து விண்ணப்பிக்கவும்!

பஜாஜ் பிரீமியம் மின்சார ஸ்கூட்டர்: 3 புதிய வண்ணங்களில் அறிமுகம்!

English Summary: Gold-buying public: Buy now just by looking at this! Published on: 06 March 2023, 08:03 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.