தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்த வகையில் இன்று ரூ.136 உயர்ந்தும், கிராம் ஒன்றுக்கு ரூ.17 உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தி இருந்தது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து இருந்தது. அதன் பின்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது, குறிப்பிடத்தக்கது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 உயர்ந்து ரூ.41,664 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராம் ஒன்றுக்கு ரூ.17 உயர்ந்து மொத்தமாக ரூ.5208 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிவிலையில் கிராம் ஒன்று ரூ.75.50 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
தங்கம் ஒரு கிராம்: ரூ.5208
தங்கம் ஒரு பவுன் : ரூ.41,664
வெள்ளி ஒரு கிராம்: ரூ.75.50
வெள்ளி ஒரு கிலோ: 77,500
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த விலையேற்றத்த்தினால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க
ரூ.1000 கோடி: நவீன முறையில் சேவல் சண்டை நடத்த திட்டம்!
Aavin: ஆவின் பணி நியமனத்தில் புதிய அறிவிப்பு: பால்வளத்துறை அதிரடி
Share your comments