கடந்த சில நாட்களாக, உலக காரணிகளுக்கு ஏற்ப, சர்வதேச சந்தையின் நிலை மற்றும் மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றங்களை கண்டு வருகிறோம். இருப்பினும், வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இந்த நெருக்கடியானது உலகளாவிய தங்க சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை 3 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,879-க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.64 குறைந்து ரூ.39,032க்கு விற்பனையானது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,997க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ.5,278 ஆகவும், ஒரு சவரன் ரூ.42,224 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 70.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்தியாவைப் பொறுத்த வரையில், பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மாறுபடுகிறது. வரி வகையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் விலைகள் மாறுபடும். மேலும் செலவு மற்றும் சேதம் ஆகியவற்றின் அடிப்படையில் கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கங்களைக் காணலாம்.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையையும், பல அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. அதன் தாக்கம் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் உள்ளது.
உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான அணுகுமுறை இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்த வரையில், வெவ்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மாறுபடுகிறது. வரி வகையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் விலைகள் மாறுபடும். மேலும், விலை மற்றும் சேதத்தின் அடிப்படையில் கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கங்களைக் காண முடியும்.
மேலும் படிக்க..
சென்னை: தங்கம் விலை உயர்வு: விலை என்ன?
தங்கம் விலை குறைந்துள்ளது, எவ்வளவு, விலை என்ன? விவரம் உள்ளே!
Share your comments