அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்த செமிஸ்டர் தேர்வு நவம்பர் 15, 2021 தேதிக்கு மேல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த தேர்வு ஜனவரி 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்தார். மேலும், இறுதியாண்டு மாணவர்கள் இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்ததும் குறிப்பிடதக்கது.
ஜனவரி 20 முதல் தொடங்க இருந்த நேரடி தேர்வுகள், தற்போது பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் என்றும் 29ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களை அழைத்துப் பேசி, சென்னை பல்கலைக்கழக கல்வி தரத்தை உயர்த்துவது குறித்தும் கொரோனா தடுப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் - டிசம்பர் மாதம் நேரடியாக நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும் என அறிவித்துள்ளார். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,307 மாணவர்களும், இதில் 4.51 லட்சம் பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலைக்கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள், ஆன்லைன் தேர்வால் 1.96 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயனடைவார்கள்’ என்று கூறினார்.
ஏற்கனவே செமிஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடப்பதில் வருத்தம் தெரிவித்த உயர் கல்வி மாணவர்களுக்கு, இது ஒரு நற்செய்தியாகும். அதே நேரம், அரியர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:
Share your comments