தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
டாலர் மதிப்பு உயர்ந்து வருவது, வட்டி முதலான காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்துகொண்டு இருக்கிறது. எவ்வளவு சரிவு அடைந்துள்ளது? இன்றைய விலை நிலவரம் என்ன? தொடர்ந்து தங்கம் விலை சரிய நேரிடுமா? முதலான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
தங்கம் விலை அண்மையில் இந்தியாவில் வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, நகை வாங்குவோர் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருந்தனர். வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடுமோ என அச்சம் அனைவரது மனதிலும் நிலவியது.
மேலும் படிக்க: இனி இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைவு!
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிந்றது. இந்த குறைவினால் நகை வாங்குவோருக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இத்தகைய சூழலில் தற்பொழுதும் தங்கம் விலை சரிவின் நிலையிலேயே இருக்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை கூடுதலாகச் சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நிலையில் தங்கத்தின் விலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 632 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 37 ஆயிரத்து 056 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது. இதேபோன்று ஒரு கிராம் வெள்ளி விலை 62 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 62 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கடந்த சுமார் ஒரு வார காலமாகத் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது என்பதும் தங்கம் விலை குறைந்ததற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்ற அச்சம் எழுந்தது முதலானவையும் தங்கம் விலை குறைவுக்கு இதுவே பிரதான காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை சரிந்து ஆறு வாரங்களுக்கு முந்தைய விலைக்கு விற்கப்படுவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துளனர்.
அமெரிக்காவில் மீண்டும் பணவீக்கம் உயர்ந்ததால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அச்சம் தற்போது உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களை அச்சம் அடைய செய்துள்ளது. ஃபெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என அச்சம் எழுந்து இருப்பதால், அமெரிக்க டாலரின் மதிப்பு பயங்கர வேகத்தில் உயர்ந்து வருகின்றது எனத் தகவல்கள் வெளியாகின்றன.
வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற அச்சத்தாலும், அமெரிக்க டாலர் மதிப்பு அதிவேகத்தில் உயர்ந்து வருவதாலும் தற்பொழுது தங்கம் விலை குறைந்து வருகின்றது. ஆகவே, தங்கம் முதலீட்டாளர்களுக்கும், நகை வாங்குவோருக்கும் முதலீடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கிறது.
மேலும் படிக்க
ஆகாயத்தாமரை செடிகளில் இருந்து இயற்கை உரம்: வனத்துறை அறிவிப்பு!
விவசாயத்துறையில் இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்கவும்-ஒன்றிய அமைச்சர் தோமர் வேண்டுக்கோள்
Share your comments