1. செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி யில் புதிய மாற்றம்! எப்போது?

KJ Staff
KJ Staff
new driving licence sample

மத்திய அரசு வாகனங்கள் மட்டும் ஓட்டுனர்களின் உரிமத்தில் புதிய மாற்றத்தை எற்படுத்த உள்ளது. இதை குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் "நிதின் கட்கரி" பாராளுமன்றத்தில் சீரான ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் (RC) புதிய மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்த தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது அக்டோபர் 1, 2019க்கு பிறகு இந்தியா முழுவதும் இம்மாற்றம் அமல் படுத்தப்படும் அத்துடன் ட்ரைவிங் லைசென்ஸ் (driving licence) மற்றும் பதிவு அட்டை (Registration card) சமமாக மாற்றப்படும்.

new driving licence sample

புதிய ட்ரைவிங் லைசென்ஸ் மற்றும் பதிவு அட்டை

ட்ரைவிங் லைசென்ஸ்

சிப் இல்லாமல் இருக்கும் ட்ரிவிங் லைசென்ஸ் லேமினேட்டட் கோட்டட் (Laminated coated) அல்லது ஸ்மார்ட் கார்டு (Smart Card) போன்று இருக்கும். இதில் விரைவான பதில் (QR) குறியீடு மற்றும் அருகிலுள்ள தகவல் தொடர்பு (NFC) போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டு, இதில் (ATM/Credit) ஏடிஎம் / கிரெடிட் கார்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இருக்கும்.

பதிவு அட்டை (Registration card)

அக்டோபர் 1 முதல் வாகனங்களின் பதிவு அட்டையை  பேப்பர்லெஸ்ஸாக (paperless) மாற்றப்படும். இந்த புதிய ரெஜிஸ்ட்ரேஷன் கார்டு புதிய ஓட்டுநர் உரிமம் போன்ற வசதிகளை வழங்கும். வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் அனைத்து விவரங்களும் பதிவிடப்பட்டிருக்கும். இந்த மைக்ரோச்சிப் மற்றும் கியூஆர் கோட்ரட் (QR Code) கார்டின்  பின்புறத்தில் அமைந்திருக்கும். இந்த கியூஆர் கோரட் மூலம் மையத்தில் ஆன்லைன் டாட்டா பேஸ் (data base) வழியாக ஓட்டுனரின் மற்றும் வாகனம் பற்றிய விவரம் முழுவதும் ஒரு  டிவைஸில் (device)  கிடைத்துவிடும். மேலும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சியின் நிறங்களிலும் மாற்றம் ஏற்படும். இரண்டின் நிறமும் ஒன்று போல் இருக்கும். மத்திய அரசின் இந்த புதிய மாற்றம் 2019 அக்டோபர் 1 முதல் இந்தியா முழுவதும் அமல் படுத்தப்படும்.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: government going to make new changes on driving licence and RC

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.