தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இந்த பட்டியலில ராகி, கம்பு, குதிரைவாளி, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து, தமிழக அரசு அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து, நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும், சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும், தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அரசாணையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், மாண்புமிகு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
"சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டலை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தினை அரிசி மூலம் கொள்முதல் செய்யப்படும். இயக்கச் சங்கங்கள் மற்றும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் பொது விநியோக முறை மூலம் விநியோகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பால் சிறுதானியங்களை கொள்முதல் செய்தல், பதப்படுத்துதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் தேவை குறித்து விவாதிக்க 08.10.2021 அன்று கூட்டம் கூட்டப்பட்டது.
சிறுதானியங்களை நியாய விலைக் கடைகள் மூலம் கொள்முதல் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் சில வழிமுறைகளை வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிக இயக்குநர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பல்கலைக்கழகத் துறை, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாநில அளவில் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அமைக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
இவர்களின் பரிந்துரையின் கீழ் அரசு, சிறு தானியங்களுக்கு விலை நிர்ணயத்து, கடந்த ஜனவரி 25,2022 அன்று நியாய விலை கடைகளில் சிறு தானியங்களை, வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் அனைவரும் 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற பழக்கத்திற்கு திரும்புகின்றனர். உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர், இந்நிலையில் அரசின் இந்த முடிவு நிச்சயம் மக்களிடையே வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க:
வைட்டமின் நிறைந்திருக்கும் வண்ண காலிஃபிளவர், அதிக மகசூலும் தரும்!
2022 பட்ஜெட்டும் டிஜிட்டல் முறையில் தாக்கல், எவ்வாறு நடக்கும் இந்த பணி?
Share your comments