சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டுச்சாணம் மற்றும் பசு கோமியம் மாநில அரசால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனைப் போலவே, தமிழகத்திலும் மாட்டுச்சாணம் மற்றும் பசு கோமியத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாட்டுச்சாணம் (Cow Dung)
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நேற்று கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செந்தில்குமார் பேசியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில், 'கோதன் நியாய் யோஜனா' என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஏராளமான விவசாயிகள் இதில் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து மாட்டுச்சாணம், சிறுநீர் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை பயன்படுத்தி அந்த மாநிலத்தில் இயற்கை உரம் தயார் செய்து விற்கின்றனர். இதன் வாயிலாக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது.
இதேபோன்று, தமிழகத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் போதிய அனுபவம் கொண்ட அலுவலர்கள் உள்ளனர். 'டியூகாஸ்' போன்ற கூட்டுறவு நிறுவனங்களிடம் மாநிலம் முழுவதும் விநியோகிக்க கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. திட்ட செயல்பாடு, அமலாக்கத்தை பார்வையிட, வேளாண் பல்கலை அதிகாரிகள் நேரடியாக சத்தீஸ்கர் சென்று வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
முன்னோடி திட்டமாக, இதை கோவை மாவட்டத்தில் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
விவசாயம் தொடர்புடைய வெவ்வேறு துறைகளின் சார்பில் தனித்தனியான இணையதளங்கள் உள்ளன. அவை அனைத்தின் 'லிங்க்' கொண்ட 'போர்ட்டல்' ஒன்றை வேளாண் துறை உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மாவட்டந்தோறும் வேளாண் துறையில், ஏற்றுமதிக்கு என்று தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
மேலும் படிக்க
திருத்தணி ஆடிக் கிருத்திகை: 9 லட்சம் கிலோ குப்பைகளில் உரம் தயாரிக்க திட்டம்!
Share your comments