ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும்.
வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)
ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து பென்சன் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்துக்குள் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital life certificate) சேவை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு முகாம்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எஸ்பிஐ (SBI) வங்கியுடன் இணைந்து இந்த முகாமை அரசு தொடங்கியுள்ளது.
சிறப்பு முகாம் (Special Camp)
முதலில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வூதியதாரர்கள், பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் பற்றியும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க
மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆன்லைனில் டெபாசிட் வசதி!
Share your comments