launch of Haifa India Fertilizers and Technologies Private Limited
உரங்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஹைஃபா குழுமம் (Haifa Group), இந்தியாவில் தனது துணை நிறுவனமாக ’ஹைஃபா இந்தியா உரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ப்ரைவேட் லிமிடெட்’-ஐ (Haifa India Fertilizers and Technologies Private Limited) அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்ளூர் விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப புதுமையான மற்றும் துல்லியமான ஊட்டச்சத்து மேலாண்மைக்கு ஏற்ற உரங்களை வழங்குவதன் நோக்கத்தோடும், இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் துணை நிறுவனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஹைஃபா குழுமம்.
பிரம்மாண்டமாக நடைப்பெற்ற அறிமுக நிகழ்வு:
ஹைஃபா குழுமம், ஜனவரி 23 ஆம் தேதி (23.01.2025) மும்பையிலுள்ள புகழ்பெற்ற தாஜ்மஹால் டவர் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் ”ஹைஃபா இந்தியா உரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ப்ரைவேட் லிமிடெட்” (Haifa India Fertilizers and Technologies Private Limited) நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது.
இந்திய விவசாயிகளுக்கு புதுமையான, நீரில் கரையக்கூடிய உரங்கள் மற்றும் துல்லியமான ஊட்டச்சத்து மேலாண்மைக்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளினை வழங்கும் வகையில் ஹைஃபா இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஹைஃபா குழுமத்தின் வாரியத் தலைவர் ஏரியல் ஹால்பெரின்; தலைமை நிர்வாக அதிகாரி மோட்டி லெவின்; மத்திய மேற்கு இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் கோபி ஷோஷானி; ஹைஃபா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சுதாகர் மடிலா; மற்றும் ஹைஃபா இந்தியாவின் ஆலோசகர் சச்சின் குல்கர்னி மற்றும் பிற உலகளாவிய தலைமை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ariel Halperin, Board Chairman of Haifa Group
ஹைஃபா குழுமத்தின் தொடக்கமும் பின்னணியும்:
1966 இல் நிறுவப்பட்ட ஹைஃபா குழுமம், நவீன விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப உயர்தர உரங்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனித்தும் மற்றும் 18 துணை நிறுவனங்களின் வாயிலாகவும் உரங்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது.
இஸ்ரேலில் அதிநவீன முறையில் உர உற்பத்தி மேற்கொள்கிறது. இது அதன் உலகளாவிய செயல்பாடுகளின் முதுகெலும்பாக செயல்படுகிறது என்றால் மிகையல்ல. ஹைஃபாவின் தயாரிப்புகள் உலகளவில் வளர்ந்து வரும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், பயிர் விளைச்சலை அதிகரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1996 ஆம் ஆண்டு ஹைஃபா குழுமத்தின் இந்திய பயணம், உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து நீரில் கரையக்கூடிய உரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தொடங்கியது. பல ஆண்டுகளாக, அதன் தயாரிப்புகள் இந்திய விவசாயிகளால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு ஆதரவினைப் பெற்றுள்ளது. திராட்சை, மாதுளை மற்றும் மலர் வளர்ப்பு போன்றவற்றில் ஹைஃபா தயாரிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதுமையான தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் நிலையானது,2025 ஆம் ஆண்டில் 'ஹைஃபா இந்தியா உரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ப்ரைவேட் லிமிடெட்' நிறுவப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக ஹைஃபா குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை நிறுவனமானது, இந்தியா முழுவதும் ஹைஃபாவின் தயாரிப்புகளை விவசாயிகள் எளிதில் அணுகும் வகையிலும், அவர்கள் களத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவீன விவசாயத்திற்கான புதுமையான தீர்வுகள்
ஹைஃபா குழுமம் அனைத்து வளர்ச்சி நிலைகளுக்கும் சமச்சீர் தாவர ஊட்டச்சத்தை வழங்கும் வகையில் நீரில் கரையக்கூடிய உரங்கள் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது. உரமிடுதல் மற்றும் இலைவழி தெளித்தல் முறையில் உபயோகிக்கலாம்.
Haifa Group CEO Motti Levin with Sudhakar Maddila, Managing Director of Haifa India
இந்த உரங்கள் திறமையான ஊட்டச்சத்து உறிஞ்சுதல், துல்லியமான பயன்பாடு மற்றும் குறைந்தபட்ச உர பயன்பாடு போன்றவற்றை உறுதி செய்கின்றன. துல்லியமான விவசாய நுட்பங்கள், மண்ணற்ற சாகுபடி மற்றும் பாலிஹவுஸ் விவசாயத்தை ஏற்றுக்கொள்ளும் இந்திய விவசாயிகளிடையே இவை தற்போது பிரபலமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எல்லைகளை விரிவுபடுத்துதல்
ஹைஃபா குழுமத்தின் துணை நிறுவனம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஹைஃபா இந்தியா அதிநவீன உரங்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான ஊட்டச்சத்து மேலாண்மை அமைப்புகளில் கவனம் செலுத்தி, இந்திய விவசாயத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹைஃபா இந்தியா கடந்த ஆறு தசாப்தங்களாக அதன் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட உலகளாவிய அறிவை இந்திய விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வழங்கி அவர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாவர ஊட்டச்சத்து தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாட்டில் விவசாயிகளை ஆதரிக்க டிஜிட்டல் கருவிகளையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
வேளாண் தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்- StartupTN உடன் COXBIT புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோனோகார்பஸ் மரத்திற்கு போட்டாச்சு தடை- இவ்வளவு தீமையா இந்த மரத்தால்?
Share your comments