
வேளாண்மை தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்த StartupTN உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவம் மையம். இதுத்தொடர்பான செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு வழிவகுக்கும்.
StartupTN உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
பொது தனியார் கூட்டு முயற்சியின் மூலம் உயிர்த்தொழிநுட்பவியல், உயிர் தகவலியல், மரபியல், மூலக்கூறு கண்டறிதல், மரபணு தனிமைப்படுத்துதல், உயிரணு வளர்ப்பு மற்றும் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். இதன் தொடக்கமாக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் வேளாண் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜன.22 ஆம் தேதி (22.01.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
உயிர்த்தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் ந.செந்தில் மற்றும் StartupTN நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவராஜ ராமநாதன், தினேஷ்குமார் ஆகியோர்கள் கூடுதல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.அதுல் ஆனந்த் இ.அ.ப, முன்னிலையில் வேளாண்மை தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்த StartupTN உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உயிரித்தொழில்நுட்ப startup வளர்ச்சியடையச் செய்ய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) மற்றும் StartupTN உடன் இணைந்து செயல்படுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
StartupTN நோக்கம் என்ன?
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில், 2032 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டினை முதல் 20 உலகளாவிய ஸ்டார்ட்அப் இலக்குகளில் ஒன்றாக மாற வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஸ்டார்ட்அப்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு சாதகமான சூழலையும் தடையற்ற ஆதரவினையும் வழங்கும் முனைப்பில் StartupTN செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலை உருவாக்குவதன் மூலம் வணிக விரிவாக்கத்தை தொழில் முனைவோர்களுக்கு வழங்குதல் பணியையும் StartupTN மேற்கொண்டு வருகிறது.
இந்திய அளவில் மிகவும் பின்தங்கிய சமூகத்தினை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோர்களாக அதிகளவில் உருவெடுக்கும் மாநிலமாக தமிழகத்தினை மாற்றவும் StartupTN உறுதி பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
ரூ.754 கோடி மதிப்பிலான ஆர்டர்- சோலார் பம்பிங் சிஸ்டத்தில் அசத்தும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ்
குறைகளை அடுக்கிய விவசாயிகள்- க்ரீன் சிக்னல் கொடுத்த மாவட்ட நிர்வாகம்!
Share your comments