1. செய்திகள்

கொரோனா 3வது அலை துவங்கிவிட்டதா? ICMR கருத்து என்ன?

T. Vigneshwaran
T. Vigneshwaran

Corona 3rd Wave

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்று நோயியல் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, தனியார் தொலைகாட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், மூன்றாவது அலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"நாடு முழுவது மூன்றாவது அலை கட்டாயம் வந்தே தீரும். ஆனால் அது இரண்டாவது அலை போல் தீவிரமானதாக இருக்காது என்று டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.  மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் பல்வேறு காரணங்களையும் அலர்ச்சியத்தையும் டாக்டர் பாண்டா சுட்டிக்காட்டினார். முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டால், அது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறினார்.

இரணடைவது காரணம் ஒரு கொரோனா வைரஸ் திரிபு,  நோய் எதிர்ப்பு சக்தியைத் குறைக்கலாம். அடுத்த அலையை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது காரணம் என்னவென்றால், புதிய திரிபு நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்காது என்றாலும், அது வேகமாகப் பரவி வருவதால், அதிகமானோருக்கு தொற்று ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

பாண்டா கூறிய கடைசி காரணம் , கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மாநிலங்களால் முன்கூட்டியே நீக்கினால் அல்லது விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், தொற்று நோய் பரவல் அதிகரிக்க வழிவகுக்கக்கூடும். மேலும் மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்ப்டலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா வியாழக்கிழமை கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கான சாத்தியமான காரணங்களை பட்டியலிட்டட நிலையில், பாண்டாவின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

மூன்றாவது அலை குறித்து கருத்து தெரிவித்த AIIMS இயக்குனர் குலேரியா அவர்கள் சமூக தூரத்தை பராமரித்தல், முகமூடிகளைப் பயன்படுத்துதல் மற்றும் மக்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடத்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் மூன்றாவது அலையில் ஏற்படக்கூடிய தொற்று பரவலை மிகவும் குறைக்க முடியும் என்று கூறினார்.

மேலும் படிக்க:

111 நாடுகளில் டெல்டா வைரஸ்:வேகமாகப் பரவும் ஆபத்து!

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!

மது பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி: விரைவில் அறிவிப்பு!!

English Summary: Has the Corona 3rd wave started? What is the ICMR concept?

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.