ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதி வரியினை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இறக்குமதி வரியின் முழு விவரத்தினைக் குறித்தும், இதன் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுமா என்பதைக் குறித்தும் இப்பதிவு முழுமையாக விளக்குகிறது.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சரிசெய்யும் பொருட்டு ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய அரசானது உடனடியாகத் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியினை உயர்த்த முடிவு செய்தது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
அதன் அடிப்படையில் இன்று வெளியாகியுள்ள புதிய அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75 விழுக்காட்டில் இருந்து 15 % உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது. ஜூன் 30 ஆம் தேதியில் இருந்து இந்த வரி உயர்வு நடைமுறைக்கு பொருந்தும் எனவும் அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?
தங்கத்தின் சுங்கவரியும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு வரி தங்கத்தின் மீதான சுங்கவரியானது 7.5 விழுக்காடாக இருந்தது. தற்பொழுது, அது 12.5% எனும் அளவில் உயர்ந்திருக்கிறது. தங்கத்தைப் பொறுத்தவரையில் உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
இருப்பினும் நாடு முழுவதும் நிலவும் தங்கத்துக்கான டிமாண்ட் காரணமாக ரூபாயின் மதிப்பு தற்பொழுது வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் தங்கம் மொத்தம் 107 டன் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியில் ஜூன் மாதத்திலும் இறக்குமதி கணிசமான அதிக அளவில் இருக்கின்றது.
மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!
தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினால் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதியானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பெட்ரோல்: இன்றைய விலை நிலவரம் என்ன?
வரி விதிப்பு தங்கத்தின் மீதான இறக்குமதியைக் கணிசமான அளவில் குறைக்கும் என மத்திய அரசு எண்ணுகிறது. இதற்கு முன்பும் பலமுறை சில பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க இத்தகைய வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் வரி விதிப்பினால், உலக நாடுகளில் தங்கம் விலை குறைந்திருக்கும் நிலையிலும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
மேலும் படிக்க
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!
புதிய செய்திகள்: இனி சிலிண்டர் விலை இதுதானா? விலையில் சரிவு!
Share your comments