தமிழக சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் விவசாகிகளின் நலனுக்காக குளிர்பதன வசதி கொண்ட தானிய கிடங்கு, நவீன அரிசி ஆலை ஆகியன அமைக்க பட உள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறன் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலை அமைக்க படும்.
- எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 36 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 தனியா கிடங்குகள் பல்வேறு இடங்களில் அமைக்க பட உள்ளன. ஏற்கனவே உள்ள பழைய தானிய கிடங்குகளில் தேவையான சீரமைப்புகளை செய்யும்.
- 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உட்பட , 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தர படும்.
- கன்னியா குமரி, அரியலூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய பண்டக சாலை அமைக்கபடும்.
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு நிறுவபட உள்ளது. இதன் மூலம் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள், பூக்கள் மற்றும் இதர விவசாய பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
- புதிய முயற்சியாக ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்ட அம்மா கூட்டுறவு சிறு அங்காடி மேலும் விரிவு படுத்தப்படும்.
- காஞ்சிபுரத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு, உபரிநீர் வீணாவது தடுக்க படும்.
- வனத்துறையிலும் சில அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி வனப்பாதுகாப்பு காவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும், மேலும் வன பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை விரைவில் தொடங்கப்படும் என்றார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments