முன்னதாக சீனாவின் பிரபலமான டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட பல ஆப்களுக்கு, இந்திய அரசு தடை விதித்தது, இந்தியாவில் இதன் உபயோகத்தை முடக்கியது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம், டிக்டாக், வீசாட் மற்றும் ஹெலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் அப்ளிகேஷன்களை, இந்தியா தடை செய்ததும், குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது. இது பியூட்டி கேமரா (Beauty Camera), ஸ்வீட் செல்பி HD(Sweet Selfie HD), கேம்கார்ட் (CamCard), விவா வீடியோ எடிட்டர் (Viva Video Editor), டென்சென்ட் எஃக்ஸ்ரைவர்(Tencent Xriver), ஆன்மியோஜி செஸ்(Onmyoji Chess), ஆன்மியோஜி அரீனா(Onmyoji Arena, ஆப்லொக் (Applock) உள்ளிட்ட பல ஆப்கள் இதில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தகவல் மற்றும் தொழில் நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் அமைச்சகம் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி உத்தரவினை அமல்படுத்தி இருக்கிறது. இந்த ஆப்களின் சர்வர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன இருப்பினும், சேகரிக்கப்படும் தரவுகள் சீனாவுக்கு அனுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம், டிக்டாக், வீசாட் மற்றும் ஹெலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் அப்ளிகேஷன்களை, இந்தியா தடை செய்தது. ஜூன் 29ஆம் தேதி உத்தரவில் தடைசெய்யப்பட்ட பெரும்பாலான பயன்பாடுகள் பயனர் தரவைச் சேகரிக்கின்றன என்ற கவலையின் காரணமாக உளவுத்துறையால் சிவப்புக் கொடியிடப்பட்டது.
சீனாவுடனான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறை மோதல்களின் போது 20 இந்திய வீரர்கள் மற்றும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சீன வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, குறிப்பிடதக்கது.
செப்டம்பரில், அரசு 118 சீன மொபைல் செயலிகளை முடக்கியது. சீன மொபைல் ஆப்ஸ் மீதான தடையை தொடரும் இந்தியாவின் முடிவை சீனா எதிர்த்தது மற்றும் இந்த நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் பாரபட்சமற்ற கொள்கைகளை மீறுவதாகக் கூறியது.
மேலும் தடை செய்யப்பட்ட இந்த ஆப்களை, மாற்று வழிகளில் டவுன்லோட் செய்ய பிளே ஸ்டோரில் தடை செய்யப்பட்டன. எனினும் இதனை APK பைல்ஸ் ஆக மாற்று வழிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு தற்போது மீண்டும் இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.
ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஆப்கள் மீண்டும் வேறு வேறு பெயர்களில், அதே போன்ற தடை செய்யப்பட்ட ஆப்கள் போலவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே தற்போது தடை செய்யப்பட்ட, இந்த 54 ஆப்களும் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை தான் என்றும் அறிக்கைகள் வெளீயாகியுள்ளது.
மேலும் படிக்க:
ஃபுட் பாய்சனுக்கு உடனடி சிகிச்சை! இதோ 7 இயற்கை உணவுகள்
தெற்கு ரயில்வே-இன் புதிய அறிவிப்பு! கவுண்டரில் காத்து நிற்க தேவையில்லை!
Share your comments