
மறைந்த நமது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமாக விளங்கியது, இந்தியா முழுவதும் 10 கோடி மர கன்றுகள் நடுதல் பணியாகும். அவரின் கனவை நிறைவேற்ற அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாக 2025 மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தேசிய அளவிலான மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு துவக்க விழா தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சென்னையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி மற்றும் அனைத்திந்திய வேளாண் மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளர் முனைவர்.வினோத் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சிவம் மற்றும் செந்தில் DM ,Tasmac மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உட்பட சமூக ஆர்வலர்களான சதீஷ், ஹரிஹரன், செந்தில்,சாமிக்கண்ணு, அய்யன் துறை மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நோக்கம் என்ன?
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 2025 பேர் மூலம் 2025 மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவத்தை இளைஞர்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தினால் உண்டாகும் விளைவுகள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள், சமூக அலுவலர்கள் போன்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற வகையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கப்பட்டுள்ளது.
நீங்களும் பங்கேற்கலாம்?
அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை எடுத்துள்ள முன்னெடுப்பில் நீங்களும் ஒருநபராக இணையலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மரக்கன்றுகளை நட்டு, நம் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதன் முக்கியத்துவத்தை பற்றி ஒரு நிமிட காணொளி வாயிலாக எடுத்துரைத்தல் வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் முன்னெடுப்பு குறித்து கார்த்திகேயன் கூறுகையில், ”நாங்கள் பொதுமக்களிடையே அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாக வைக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் நடிகர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் மரக்கன்றுகள் நடுதல் முக்கியத்துவத்தை மிகப்பெரிய விழிப்புணர்வு நிகழ்வாக கொண்டுச் செல்ல உங்கள் ஆதரவினை நல்குகிறோம்."
"மாறிவரும் காலநிலைகளை சமாளிக்க நம் சுற்றுப்புறத்தை பசுமை மயமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம். மரம் நடுவோம்..மழை பெறுவோம், பூமித்தாயை பசுமை போர்வையால் குளிரூட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Read more:
ரூ.35.30 கோடி ஈவுத்தொகை: வளர்ச்சிப் பாதையில் தேசிய விதைகள் கழகம்
Kisan e-Mitra: விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறது கிசான் இ-மித்ரா ஏஐ?
Share your comments