1. செய்திகள்

பயிர் சேதத்தை தவிர்க காப்பீடு செய்யுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
kharif crops sowing on full swing

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காரீஃப் பருவத்திற்கான பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழுவீச்சில் நடைபெறும் காப்பீட்டுப் பதிவு

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ், 2020 காரீஃப் பருவத்திற்கான பயிர் காப்பீடுப் பதிவு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அனைத்து விசாயிகளுக்கும் இந்த பதிவை மத்திய அரசு இலவசமாக செய்து வருகிறது. பிரிமியத் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் உணவுப் பயிர்களைக் காப்பீடு செய்து, காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதம் என்ற மிகக் குறைவான காபீட்டுத்தொகையைச் செலுத்தினால் போதும்.

எஞ்சிய காபீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. நடப்பு 2020 காரீஃப் பருவத்தில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவுகளைச் செய்வதற்கான அவகாசம் 2020 ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

பயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் காப்பீடு

விதைப்புக்கு முன்பிருந்து அறுவடை முடியும் வரையிலான நடவடிக்கைகள் முழுவதற்கும் பயிர் இழப்பு ஏற்பட்டால் பாதுகாப்பை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் விரைந்து பதிவு செய்துகொண்டு, எதிர்பாராத காரணத்தால், விதைப்பு தடைப்பட்டால் அதற்கு இழப்பீட்டைப் பெறமுடியும்.

மேலும், வறட்சி, வெள்ளம், தண்ணீர் சூழ்தல், திடீர் மழையால் ஏற்படும் மண் சரிவுகள், ஆலங்கட்டி மழை, இயற்கையால் ஏற்படும் தீ விபத்து, புயல் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பு நடப்பு பயிர்களுக்கும், ஆலங்கட்டி மழை, புயல், திடீர் மழை ஆகியவற்றால் ஏற்படும் இழப்புக்கு அறுவடைக்குப் பிந்தைய பயிர்களுக்கும் ஒருங்கிணைந்த அபாய இழப்பீடு வழங்கப்படுகிறது.

 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வங்கி, தொடக்க வேளாண் கடன் சங்கம், பொதுச்சேவை மையம்/ கிராம அளவிலான தொழில்முனைவோர், வேளாண்துறை அலுவலகம், காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதியை தொடர்பு கொள்ளலாம்.

அல்லது www.pmfby.gov.in என்ற தேசிய பயிர்க் காப்பீட்டு வலைதளத்திற்கோ, https://play.google.com/store/apps/details?id=in.farmguide.farmerapp.central என்ற பயிர்க் காப்பீட்டு செயலியையோ நேரடியாக ஆன்லைனில் தொடர்பு கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

விவசாயிகள் ஆதார் எண், வங்கி பாஸ் புத்தகம், நில ஆவணம்/ குத்தகை ஒப்பந்தம், சுய பிரகடனச் சான்றிதழ் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நடைமுறையை நிறைவு செய்ய கொண்டு வர வேண்டியது அவசியம். இந்தப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து , பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தப்படும்.

தடையற்ற பதிவை உறுதிசெய்ய பயிற்சிகள்

விவசாயிகளுக்கு தடையற்ற பதிவை உறுதிசெய்யும் வகையில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொதுச்சேவை மையங்கள், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, கிராம அளவிலான தொழில் முனைவோர், மாநில மற்றும் மாவட்ட அளவிலான வேளாண் மற்றும் ஆத்மா அதிகாரிகள் உள்பட 29,275 அதிகாரிகளுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பயிற்சி அளிக்கிறது. இது தவிர, பல்வேறு சம்பந்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களும் பயிற்சி அளித்து வருகின்றன. கிசான் அழைப்பு மையங்களைச் சேர்ந்த 600 நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்குவதையும் அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் படிக்க... 

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை - கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் - மலர் விவசாயிகள் மகிழ்ச்சி!

மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!

English Summary: Insure to avoid crop damage Central Government calls on farmers

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.