சோளம், கம்பு, நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்களை 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டிய மாவட்டங்கள், தங்களின் பயிர்களை காப்பீடு செய்துக்கொள்ள வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பயிர் காப்பீடு (Crop Insurance)
இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள், பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது, காரீஃப் பருவப் பயிர்களுக்கான காப்பீடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பயிர்களுக்கு கடைசி தேதி அறிவிக்கப்பட்டு காப்பீடு முடிக்கப்பட்டுள்ளது.
அதன் படி வரும் 31-தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யப்பட வேண்டிய வேளாண் பயிர்களின் விவரங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
காப்பீடு பயிர்களும், மாவட்டங்களும் :
மக்காசோளம்
- திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்கள்
துவரை
- மதுரை
உளுந்து
- திருப்பூர் மற்றும் மதுரை
பச்சை பயிறு
- திருப்பூர் மற்றும் மதுரை
நிலக்கடலை
- திருப்பூர், மதுரை, விருதுநகர்
பருத்தி
- திருப்பூர், மதுரை, தரும்புரி, விழுப்புரம்
சோளம்
- திருப்பூர், திண்டுக்கல்
கம்பு
- திண்டுக்கல்
எள்ளு
- திருப்பூர், மதுரை, மற்றும் விருதுநகர்.
இதே, போன்று தோட்டக்லை பயிர்களான வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கும் காப்பீடு செய்ய வரும் 31-ம் தேதியே கடைசி நாளாகும்.
மேலும் படிக்க..
Kisan Credit card: கிசான் கிரெடிட் கார்டு கடனை ஆகஸ்ட் 31-க்குள் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?
நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!
Sugar free Rice : சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சுகர் ஃப்ரீ நெல் சாகுபடி! - RNR 15048
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!
Share your comments