சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நாடு முழுதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Licence)
வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவோர், வெளிநாடுகளிலும் வாகனங்களை இயக்குவதற்காக, சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.தற்போது வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வடிவங்கள், நிறங்கள், அளவுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் பயன்படுத்தும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதையடுத்து, நாடு முழுதும் ஒரே நிறம், வடிவம் மற்றும் அளவுகளில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க
புதிய தங்க சேமிப்புத் திட்டம்: மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாடு ஒரே உரம்: புதிய உர மாற்றங்கள் விரைவில் வரப் போகுது!
Share your comments