1. செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம் எத்தனை நடத்துறீங்க? டென்ஷனாகிய இறையன்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

iraianbu order to conduct medical camp for cattle twice a month

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மாதம் இருமுறை கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் அரசு கால்நடை மருத்துவமனை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையம், பொத்தேரி காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு கோழிப்பண்ணையில் நாட்டுக்கோழி வளர்க்கப்படுவதை நேற்று (28.5.2023) தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கால்நடை மருத்துவமனை சிட்லப்பாக்கத்தில் செல்லப்பிராணிகள் கால்நடைகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும் பணிகள் குறித்து பொதுமக்களிடம் நேரிடையாக பார்வையிட்டு கருத்துக்கள் கேட்டறிந்தார். தரமான சிகிச்சையை புதிய தொழில்நுட்பத்துடன் உடனுக்குடன் வழங்கிட அறிவுரை வழங்கினார், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார், மாதம் இருமுறை கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மாநகராட்சியின் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். இந்த கால்நடை மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கால்நடைகள் பற்றிய சுவர் ஓவியங்கள் வரைய வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு நாட்டுக் கோழிப் பண்ணையில் வளர்க்கப்படுகின்ற கடக்நாத், வனராஜா, அசீல்,நிக்கோபாரி கோழி இனங்கள்,ஜப்பானியக் காடை,வான்கோழி மற்றும் கினிகோழி வளர்ப்பு குறித்து பண்ணையில் ஆய்வு செய்யப்பட்டது.

அரசு கோழி பண்ணை காட்டுப்பாக்கம் 11.75 ஏக்கரில் அமைந்துள்ளதில் விரிவாக்கம் செய்ய நடப்பு ஆண்டு 2023-2024-ல் ரூ.5.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய பண்ணை கண்காணிப்பு அலுவலக கட்டிடம், கூடுதல் குஞ்சு பொரிப்பகம், விவசாயிகள் பயிற்சி கூடம் ஆகியவை உருவாக்கப்படவுள்ளது. பண்ணையில் உள்ள அனைத்து காலியிடங்கள் உபயோகப்படுத்த ஏதுவாக பண்ணையை விரிவாக்கம் செய்திட விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார்.

ஆய்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லட்சுமி இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் அழகுமீனா இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குனர் ஜெயந்தி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

pic courtesy: TNDIPR

மேலும் காண்க:

கோடை காலத்தில் ஏன் தர்பூசணி சாப்பிட சொல்றாங்க தெரியுமா?

English Summary: iraianbu order to conduct medical camp for cattle twice a month

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.