ரயில் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் விதிமுறை இருக்கிறது. இதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியுமா? அதைக் குறித்துதான் இப்பதிவு வழங்குகிறது.
ரயிலில் பயணம் செய்கின்ற லட்சக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்து இருக்கின்றது. ஒருவேளை நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பராக இருந்தால் இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. ரயில் பயணிகளுக்கு அவ்வப்பொழுது பல இலவச வசதிகளை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது.
இந்த தகவல் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிடுகையில், இனி ரயிலில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். ஆகவே அடுத்து வரும் நாட்களில் நீங்களும் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் இனி உங்களுக்கும் இலவசமாக உணவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
புதிய விதியின்படி, ரயிலில் பயணம் செய்யும்பொழுது உணவுக்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்து தரப்படுகின்றது. ஆனால் நிறையப் பேருக்கு அதுபற்றித் தெரிவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பயணிகள் இதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்பவர்கள் பலமுறை ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய இருக்கிறது. சில ரயில்கள் தாமதமாக வருகின்றன. அவ்வாறு ரயில் தாமதமாக வந்தால், ரயில்வே தரப்பில் இருந்து இலவச உணவு வசதி கிடைக்கும் எனக் குறிக்கின்றது. குறிப்பிட்ட சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வே வழங்கி வருகின்றது.
IRCTC விதிகளின்படி, பயணிகளுக்கு இலவச உணவு வசதி வழங்கப்படுகின்றது. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்பொழுது இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இந்த உதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆன்லைன் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த உணவு வழங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏதேனும் காரணத்தினால் ரயிலை தவறவிட்டாலும், பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்காக, ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TDR படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட் கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
30 நிமிடங்களில் உடல் எடை குறைய வேண்டுமா? இதைச் செய்யுங்கள்!
இந்த கோடையில் மாம்பழங்களை எப்படி வாங்குவது? கவனத்தில் கொள்ள வேண்டியவை!
Share your comments