பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது எனவும், கம்மல், செயின் அணிய கூடாது எனவும் சமூகப் பாதுகாப்புத் துறை உத்தரவு அளித்துள்ளது. இதோடு மேலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள் இப்பதிவில் விளக்கப்படுகின்றன.
பிறந்த நாள் அன்று பள்ளிக்கு மாணவர்கள் சீருடையில் வருதல் வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கம்மல், செயின், காப்பு போன்றவை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவ, மாணவிகளுக்குக் கூறியிருப்பவை வருமாறு,
- மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருதல் வேண்டும்.
- தலையில் எண்ணெய வைத்துத் தலைவாரி வர வேண்டும்.
- காலில் காலணி அணிந்து வருவது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
- விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
- பிறந்த நாள் என்றாலும் மாணவ, மாணவிகள் பள்ளியின் சீருடையில் தான் பள்ளிக்கு வருதல் வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம், கைப்பேசி போன்றவற்றை எடுத்து வர அனுமதி இல்லை.
- அடிக்கடி கை, கால்களை கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும்.
- மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களைப் பயன்படுத்த கூடாது.
- டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வருகை தரக் கூடாது.
- மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் அணிவதை தவர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: அமெரிக்கா பேங்க் license-ஆ கேன்சல் பன்னுங்க: King Maker காமராஜ்
மாணவ மாணவியர்களிடம் நீதிநெறி கதைகள், தெனாலிராமன் கதைகள், காப்பிய கதைகள், சுதந்திரப் போராட்டக் கதைகள் உள்ளிட்ட கதைகளை எடுத்துக் விளக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல், மாணவ, மானவிகளிடையே சுற்றுச்சூழல், குடும்ப உறவுமுறைகள் முதலானவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க
ஒகேனக்கலில் அதிகரிக்கும் நீர் வரத்து! 1 லட்சம் கன அடியாக ஏற்றம்!!
50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
Share your comments