1. செய்திகள்

குடியரசுத் தலைவருக்காக புலிகளின் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.1.64 கோடி செலவீடு- சர்ச்சையில் சிக்கிய தேசிய பூங்கா

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Kaziranga national park Spent Rs 1.6 Crores foe Host Ram Nath Kovind

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு கடந்த ஆண்டு வருகை தந்தனர். அவர்களை வரவேற்பதற்காக அஸ்ஸாம் அரசு, காசிரங்கா தேசிய பூங்காவின் புலிகள் பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.1.1 கோடியைப் பயன்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 2021 ஆம் ஆண்டு, அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அப்போதைய குடியரசுத் தலைவர் கோவிந்திற்கு அசாம் மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்க ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றார். முதல்வரின் அழைப்பை ஏற்று 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-27 மூன்று நாள் பயண திட்டமாக குடியரசுத்தலைவர் அசாம் சென்றார். தனது பயணத்தில் தேஜ்பூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் கலந்துக்கொண்டார்.

தேசிய பூங்காவிற்கு வருகை தரும் குடியரசுத்தலைவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு, உபசரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநில கள இயக்குனரின் பதிலின்படி, தேசிய பூங்காவில் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நிதியிலிருந்து மொத்தம் ரூ.1,64,16,000, செலவிடப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பிப்.26 மற்றும் பிப்.27 தேசிய பூங்காவினை பார்வையிடுவதற்காக தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் விலங்குகள் நல உரிமை ஆர்வலர் ரோஹித் சவுத்ரி என்பவர் இந்திய குடியரசுத் தலைவருக்கு தேசிய பூங்கா அதிகாரிகள் அதன் வனவிலங்குகளுக்கான நிதியைப் பயன்படுத்தி விருந்தளித்ததாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் கேள்விப்பட்டதால், மே 18, 2022 அன்று  RTI ஐ தாக்கல் செய்தார். பூங்கா அதிகாரிகளிடமிருந்து பதிலைப் பெற முடியாததால், ஆகஸ்ட் 2022 இல், RTI சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்திடம் இரண்டு முறை முறையிட்டுள்ளார். இறுதியில், நவம்பர் 30, 2022 அன்று சவுத்ரி கேட்ட தகவலை  வழங்குமாறு பூங்கா அதிகாரிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பூங்கா அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவலைப் பெற சவுத்ரி ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

Ram Nath Kovind at Kaziranga national park

பூங்கா அதிகாரிகள் செலவினங்களை நியாயப்படுத்த பயன்படுத்திய வனப்பாதுகாப்பு விதி 25 (B) (2) கூறுவது என்னவென்றால், “சுற்றுலா நுழைவு கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் உருவாக்கப்படும் நிதியில் 90 சதவீதம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் மற்றும் 10-ல் ஒரு சதவீதம் சமூக நிதியாக நிலையான வைப்பில் வைக்கப்படும் என மட்டுமே உள்ளது.

எவ்வாறாயினும், விதிகளின் படி இந்த நிதியானது புலிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், உள்ளூர் மக்களின் பங்கேற்பின் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சிகளுக்காகவும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகள் எதுவும், உயரதிகாரிகளின் வருகைக்கான செலவினங்களைச் சந்திப்பதற்காக அறக்கட்டளையில் இருந்து நிதியை பயன்படுத்தலாம் என குறிப்பிடப்படவில்லை.

கோவிந்தின் வருகையின் போது புலிகள் பாதுகாப்பு நிதியை பூங்கா அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியது குறித்து கேட்டதற்கு, மாநில வனத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி அசாமிய ஊடகங்களுக்கு இது பற்றி தெரியாது என்றும் அது குறித்து விசாரிப்பதாகவும் கூறினார். இப்போது இந்த பிரச்சினை அந்த மாநிலம் மட்டுமின்றி விலங்குகள் நல சமூக ஆர்வலர்களிடமும் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

காசிரங்கா தேசிய பூங்கா இந்தியாவில் ராயல் பெங்கால் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் அரிய காட்டு இனப்பெருக்கம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில், இந்த பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது மற்றும் உலகிலேயே அதிக அடர்த்தி கொண்ட புலிகளின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட புலிகள்  கணக்கெடுப்பின்படி, பூங்காவில் 124 புலிகள் உள்ளன.

மேலும் காண்க:

அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்

English Summary: Kaziranga national park Spent Rs 1.6 Crores foe Host Ram Nath Kovind Published on: 30 March 2023, 01:54 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.