தமிழகத்தில் காணப்படும் பெரு நகரங்களில் ஒன்றாகத் திருச்சியும் உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தற்போது செயல்படுகிறது. அது போல, திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மிக விரைவான பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவை மிகுந்த பயனளிக்கிறது. அதோடு, மெட்ரோ சேவையின் பயணக் கட்டணமும் குறைவு என்பது கூடுதல் நன்மையாகும். இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாவது மெட்ரோ ரயில் சேவையைத் திருச்சி பெற இருக்கிறது. ஆம், திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் துரிதப் போக்குவரத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்று முடிந்திருக்கிறது. அதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் படிக்க: அரசு பள்ளிகளில் குவியும் அட்மீசன்கள்! ஏன் தெரியுமா?
கூட்டத்தின்போது பேசிய எம்.ஏ.சித்திக், தலைநகர் சென்னையில் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் மெட்ரோ ரயில் துரித போக்குவரத்து சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அதேபோல் திருச்சி மாநகராட்சியிலும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாகவும், விரைவாக்கும் விதமாகவும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
அதற்கான முதல்கட்ட ஆலோசனை தான் இது எனவும் தகவலைக் கூறியிருக்கிறார். மேலும் கூறுகையில், திருச்சி மாநகரில் துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் ஆகியன முதல் கட்டமாகக் கண்டறியப்படும். இதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பின் பெருந்திரள் துரித போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
இதுதொடர்பாக ஆய்வு செய்ய தேவையான ஒருங்கிணைந்த நகர்வு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான வேலைகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் திருச்சி மாநகருக்கு உகந்த துரிதப் போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும் எனவும் கூறினார். ஆகவே, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது விரைவில் தெரிய உள்ளது.
மேலும் படிக்க
Share your comments