மேட்டூர் அணையில் வரும் நீரின் அளவு 130 கன அடியாக அதிகரித்து இருக்கின்றது. இந்நீரின் வருகை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்வரத்து, நீர் இருப்பு குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் அணைக்கு வருகின்ற நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்துகொண்டே வந்தது. ஆனால் இன்று காலை நேர நிலவரத்தின்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 130 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரத்தின்படி 79.40 அடியிலிருந்து 78.51 அடியாக சரிந்து இருந்தது. அணைக்கு வந்த நீரின் அளவு வினாடிக்கு 161 கன அடியிலிருந்து வினாடிக்கு 107 கன அடியாக சரிந்து காணப்பட்டது.
ஆனால் இன்று நீரின் வரத்து அதிகரித்து இருப்பதால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 107 கன அடியிலிருந்து வினாடிக்கு 130 கன அடியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு வீதம் அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வெளிவந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 39.61 டி.எம்.சி ஆக இருக்கிறது.
மேலும் படிக்க
விவசாயிகளால் தொடங்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்! புதுவை விவசாயிகள் அசத்தல்!!
கோவையில் விவசாயிகள் நூதனப் போராட்டம்! கஞ்சி தொட்டி திறந்து ஆர்பாட்டம்!!
Share your comments