1. செய்திகள்

ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Ration Shop

பொருள்கள் பெற அனைத்துக் குடும்ப அட்டைதார்களும் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை என நடைப்பெற்று வரும் சட்டமன்றத் கூட்டத்தொடரில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேசன் கடைகளில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களில் எவரேனும் ஒருவர் நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்களை வாங்க இயலும் என்கிற நிலை உள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் பயோமெட்ரிக் முறை சரியாக வேலை செய்யவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இதனிடையே சமீபத்தில் ரேசன் கடையில் பொருட்களை வாங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் நேரில் வர வேண்டும் என கூறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில், இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்ற கூட்டத்தொடரில் விளக்கம் அளித்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

ஒன்றிய அரசு வழங்கும் அரிசியைப் பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்க e-kyc (இணைய வழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது விநியோகத் திட்ட அங்காடிகளிலுள்ள கருவி மூலம் கைரேகைப் பதிவு அல்லது கருவிழி வழிப் பதிவு வழியாகத் தங்கள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டு 45% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டிருந்தது. சில இடங்களில் அனைத்து உறுப்பினர்களும் வந்தால்தான் பொருள்கள் பெற முடியும் என்று தவறுதலாகக் கூறப்பட்டதாகக் கேள்விப்பட்டவுடனே அவ்வாறு செய்யக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் குடும்ப அட்டைகள் இதனால் இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே குடும்ப அட்டைதாரர்கள் வழக்கம் போல் கடைக்கு வந்து தங்களது பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் நேற்றைய (10.10.2023) சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரின் போது தெரிவித்துள்ளார்.

இதையும் காண்க:

தமிழக தென்னை விவசாயிகளுக்கு சூப்பரான ஹேப்பி நியூஸ்!

மானியத்தில் ட்ரோன் வழங்கும் திட்டம்- இவ்வளவு சிறப்பு சலுகையா?

English Summary: Minister Explains Confusion Regarding Ration Shop

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.