இன்செக்டிசைட்ஸ் இந்தியா லிமிடெட் (Insecticides India Limited) நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அகர்வால் கிரிஷி ஜாகரன் மீடியா ஹவுஸுக்குச் வருகை புரிந்தார். பிரபல பாலிவுட் நட்சத்திரமான அஜய் தேவ்கனை பிராண்ட் தூதராகக் கொண்டு 2001 ஆம் ஆண்டு தனது நிர்வாகச் செயல்பாடுகளைத் தொடங்கியது, இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்செக்டிசைட்ஸ் இந்தியா லிமிடெட் (Insecticides India Limited) உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் விவசாயத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை தந்த அவர் க்ரிஷி குடும்பத்துடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது; உற்பத்தி செய்து, விநியோகம் செய்து, ஏற்றுமதி செய்யும் நாடு மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்றும், அதனால் தனிப்பட்ட பிராண்டுகளும் முன்னேறும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
மேலும் அவர் கூறுகையில், விவசாயிகளுக்கு உதவுவது மிகவும் முக்கியம். அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் வழியையும் தான் நாம் முதலில் பார்க்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தினார்.
இன்று பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைச் சிறப்பாக உருவாக்கி சந்தையைக் கைப்பற்ற கடுமையாக முயற்சி செய்கின்றன. அதைத்தான் இன்செக்டிசைட்ஸ் இந்தியா லிமிடெட் செய்து வருகிறது. புதுமையின் பாதை எந்த ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும். அதேபோல், அர்ப்பணிப்பு முக்கியமானது என்றார் ராஜேஷ் அகர்வால்.
மேலும் படிக்க: மக்களே உஷார்! சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!
புதிய தலைமுறையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் எதைச் செய்தாலும் அதை எதிர்காலத்துக்கான முதலீடாகக் கருதி கடுமையாக பாடுபட வேண்டும். அப்படி பாடுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை நினைவுபடுத்தினார்.
தற்போது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை மக்கள் தொகை பெருக்கம். அது உணவு கிடைப்பதை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளும். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதிய உரங்கள் குறித்து விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றார்.
இன்செக்டிசைட்ஸ் இந்தியா லிமிடெட் பயிர் பாதுகாப்பு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது, நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட உருவாக்கம் தயாரிப்புகள், 15 தொழில்நுட்ப பொருட்கள், பல்வேறு பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் அனைத்து வகையான தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்களையும் உற்பத்தி செய்கிறது.
இன்செக்டிசைட்ஸ் இந்தியா லிமிடெட் ஜப்பானின் நிசான் கெமிக்கல் கார்ப்பரேஷன், நிஹான் நோயாகோ, ஓஏடி அக்ரியோ மற்றும் அமெரிக்காவின் மொமென்டிவ் போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களுடனும் இணைந்துள்ளது.
மதியம் 1.30 மணிக்கு கேஜே சோப்பலில் நிகழ்ச்சி தொடங்கியது. உரைக்குப் பிறகு, கிருஷி ஜாகரன் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். கிரிஷி ஜாகரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டோமினிக் மற்றும் இயக்குனர் ஷைனி டொமினிக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க
FMC கார்ப்பரேஷனின் இயக்குநர் திரு. ராஜூகபூர் KJ Choupal-க்கு வருகை!
ரேஷன் அட்டைதாரருக்கு இலவச LPG சிலிண்டர்! அரசின் அதிரடி உத்தரவு!!
Share your comments