1. செய்திகள்

15 வருடத்தில் மயிலாப்பூர் கடலாக மாறும்: எச்சரிக்கை

Poonguzhali R
Poonguzhali R
Mylapore will become a sea in 15 years: Warning

சென்னையில் மெரினா கடற்கரை அருகே உள்ள ராணி மேரி கல்லூரியும் பசுமைத் தாயகமும் இணைந்து நடத்திய 'காலநிலை அவசரநிலை மற்றும் செயல் திட்டம்' என்ற கருத்தரங்கில், உரையாற்றிய அவர் புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்ந்தால் 15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அக்கருத்தரங்கில் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கூறியதாவது,

  • இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதனால், காற்று மிக கடுமையாக மாசடைகிறது. புவி வெப்பம் அடைகிறது.
  • புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்வதால், உலகம் தற்போது எட்டியுள்ள புவி வெப்பத்தைவிட மேலும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 30 ஆண்டிற்குள் மாலத்தீவு என்ற தீவு முற்றிலும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதேபோல, புவி வெப்பம் அதிகரித்து கடல் மட்டம் உயர்ந்தால், இன்னும் 15 ஆண்டுகளில் தற்போது இருக்கும் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயம் உள்ளது. அதனால், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
  • அனைவரும் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வாழ்க்கை முறையை முற்றிலுமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நிலக்கரி, பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவேண்டும்.
  • 2 ஆண்டுகளில் தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம். முந்தைய காலத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்த பகுதிகளில் தற்போது 800 அடிக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் நிலத்தடி நீர் பற்றாக்குறை மற்றும் புவி வெப்பமும் தான். காலம் தாழ்த்தாமல் உடனடியாக காலநிலை அவசரநிலையை அமல்படுத்த வேண்டும்.
  • அனைவரும் சோலார் மின் போன்ற மாற்று வழியை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். அண்டை நாடுகளில் பொது போக்குவரத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே நிலையை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதினால் காற்று மாசு குறைந்து புவி வெப்பமும் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு புவி வெப்பமடைதலைக் குறித்துப் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உரையாற்றினார்.

மேலும் படிக்க...

சரும பிரச்சனைகள் இருக்கா? இந்த 6 இலைகள் போதும்!

முகப்பருக்களை நீக்க எளிய வழிகள்!!!

English Summary: Mylapore will become a sea in 15 years: Warning Published on: 12 April 2022, 05:08 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.