1. செய்திகள்

"நெட்டே நெட்டே பனைமரமே": பனைமரம் குறித்த புத்தகம்|வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Poonguzhali R
Poonguzhali R
Nette Nette Palm Tree: Book about Palm Tree|Published by CM Stalin!

பனைமரத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் அமையும் “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற காலப்பேழை புத்தகத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!

பனைமரத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் அமையும் “நெட்டே நெட்டே பனைமரமே” காலப்பேழை புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதமான மரம் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. பனை மரத்தின் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

அதோடு, சாரை ஓலை, கூடை முடையவும், பாய் பின்னவும் உதவுகிறது. பச்சை மட்டை வேலி அமைக்கவும், நார் எடுக்கவும் உதவியாய் அமைகிறது. பனங்காய் நுங்கும், பனம்பழமும் தருகின்றது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனங்கொட்டை, கிழங்காக மாறி உணவாக உண்ணப் பயன்படுகிறது. பாளை, பதநீர் எடுப்பதற்கு உபயோகமாய் இருக்கிறது. ஓலை கூரை வேய்வதற்கும், பதநீர், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக் குடிக்கவும், பட்டை பின்னவும் பயன்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!

அதன் தொடர்ச்சியாக, தொன்று தொட்டு தமிழரின் வாழ்வோடு இணைந்து பல பயன்களை அளித்து வருகின்ற பனை மரத்தின் சிறப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையிலும், பனையின் சிறப்பினைப் போற்றும் வகையிலும், தூத்துக்குடி, இராமநாதபுரம் போன்ற பனை மரங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் களஆய்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கி இருக்கின்ற “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற தலைப்பிலான காலப்பேழை (Coffee Table) புத்தகம் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதிதாக வெளியாகும் கூட்டுறவு சங்கத்தின் கோ பஜார் செயலி!

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை – உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஆர். நந்தகோபால், வேளாண்மை ஆணையர் எல். சுப்பிரமணியன், வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் ச.நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் இரா. பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க

சதம் அடித்த தக்காளி விலையில் மாற்றம், ரூ. 60க்கு விற்பனை!

காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!

English Summary: Nette Nette Palm Tree: Book about Palm Tree|Published by CM Stalin! Published on: 28 June 2023, 05:33 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.