1. செய்திகள்

TNPSC-இல் புதிய மாற்றங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

Poonguzhali R
Poonguzhali R
New Changes in TNPSC! Minister announcement!

TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து TNPSC உறுப்பினர் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், TNPSC-யில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

சமீபத்தில் வெளிவந்த குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் தென்காசி பயிற்சி மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, குரூப் 2 தேர்வில் வினாத்தாளில் வரிசை மாற்றம் ஏற்பட்டதும் மாணவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி இருந்தது.

அதேபோன்று முறைகேடுகள் நடப்பதை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், TNPSC தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்ததும் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி TNPSC அதிகாரிகளிடம் உரிய பதில் தருமாறு அனுப்பி உள்ளதாகத் தகவல் தெரிவித்தார்.

அதோடு, TNPSC குரூப் 4 தேர்வு குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும் தன்னிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும் சம்பந்தமே இல்லை என கூறி, தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் இருக்கிறது என்றும், அதில் முதல் 500 பேரில் 27 பேரும் முதல் 1000 பேரில் 45 பேரும் முதல் பத்தாயிரம் பேரில் 397 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்தவர் எத்தனை மையங்களை நடத்துகிறார்? எந்தெந்த இடங்களில் நடத்துகிறார்? என்பது குறித்து உரிய தகவல் இன்னும் பெறப்படவில்லை என கூறிய அவர், குரூப் 4 தேர்வில் ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் டைப்பிஸ்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் ரேங்குகளில் மாற்றம் உள்ளதாக கூறுகிறார்கள் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் அசிஸ்டன்ட் தேர்வுக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை என்றாலும் டைப்பிஸ்ட் க்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும். அதனால், ரேங்குகளில் மாற்றம் ஏற்படுவது இயல்புதான் என்றும் அமைச்சர் பி.டி.ஆர் கூறியுள்ளார்.

அதே நிலையில் சர்வேயர் தேர்வுகளிலும் காரைக்குடி மையத்தில் முதல் 500 பேரில் 200 பேரும் முதல் 1000 பேரில் 377 பேரும் முதல் 2000 பேரில் 615 பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். கடந்த காலங்களிலும் இதே போல் ஒரே தேர்வு மையத்தில் இதே போல் தேர்வு முடிவுகள் இவ்வாறு வந்துள்ளதா? என்பது குறித்து TNPSC உறுப்பினர் செயலாளரிடத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

அதோடு, TNPSC பொருத்தவரைக்கும் அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என கூறியதோடு, 7000 இடத்துக்கு 24 லட்சம் பேர் தேர்வு எழுதுவது தேர்வுக்காக அரசு செலவு செய்யும் தொகை, தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒரு தேர்வுக்காக இவ்வளவு செலவு செய்வது சரியான விதிமுறை அல்ல என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்காக சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அரசாணைக்கு அப்போது எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இதை நடைமுறைக்கு கொண்டு வருவது அவசியமாவதாகவும், மாநிலத்தின் நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மக்களே நற்செய்தி! சரிந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

MGNREGS வருகை பதிவேட்டில் சிக்கல்! தொழிலாளர்கள் வருத்தம்!

English Summary: New Changes in TNPSC! Minister announcement! Published on: 27 March 2023, 04:13 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.