சிகரெட் உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளிலும், டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பின் புதிய எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
புகையிலைப் பொருட்கள் (Tobacco Products)
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கான விதிகளில், மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இது, 2022 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில், 'புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்' என்ற வாசகமும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த புதிய எச்சரிக்கை புகைப்படமும் இடம் பெற வேண்டும்.
இவை, 2022 டிசம்பர் 1 இல் துவங்கி ஒரு ஆண்டுக்கு இடம்பெற வேண்டும். அடுத்து, 2023 டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பின், 'புகையிலை பயன்படுத்துவோர் இளமையிலேயே உயிரிழப்பர்' என்ற வாசகமும், புதிய எச்சரிக்கை புகைப்படமும் இடம்பெற வேண்டும். இந்த விதிகள் புகையிலை பொருட்கள் தயாரிப்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவே ஈடுபட்டுள்ளோர், வினியோகிப்போர், இறக்குமதி செய்வோருக்கு பொருந்தும். மீறினால், சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்
புகையிலை பயன்படுத்துவோர் இளமையிலேயே உயிரிழப்பர்
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். நிச்சயம் இந்த புதிய விதிகள் நல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
மூளையைப் பாதுகாக்க இதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்!
சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல்!
Share your comments