ஆகஸ்ட் 31க்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு முதலான இன்றைய செய்திகளை இப்பதிவு விரிவாக விளக்குகிறது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
ஆகஸ்ட் 31க்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
மின் வாரியம், நிதி நெருக்கடியில் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விவசாய இணைப்பு கேட்டு, 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.அதில், 2021 - 22ல் முதல்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டன. நடப்பு, 2022 - 23 ஆம் ஆண்டில், 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிபந்தனையின்படி ஊக்கத்தொகை அறிவிப்பு
தமிழகம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள், உப்பு, பனைவெல்லம் முதலான பொருட்களை விற்று அதிக விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ரேஷன் கடைகளில் சென்னையைப் பொறுத்த வரையில் 50 ஆயிரத்திற்குமேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும், நகர்ப்புறங்களில் 25 ஆயிரத்திற்குமேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் 15 ஆயிரத்திற்குமேல் விற்பனை செய்ய வேண்டும் எனறும் தெரிவித்துள்ளது. இந்த வரம்பைத் தாண்டி விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும் எனும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,000 தற்காலிக ஆசிரியர் பணிகளில் விண்ணப்பிக்கத் இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு!
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றாற்போல எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தக் கூடிய சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து தற்போது 1050 ரூபாயினைக் கடந்துள்ளது.
மேலும் படிக்க: வீடு கட்ட கடன் வாங்கணுமா? அப்போ இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க!
சென்னையில் முகக் கவசம் கட்டாயம்: அணியாதவர்களுக்கு அபராதம்
சென்னையைப் பொருத்தவரையில் கடந்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பரவலைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் கூடும் இடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முக்கிய செய்திகள்: ஆடு, மாடுகளின் வெப்பத்தைக் கண்டறியும் செயலி அறிமுகம்!
பிரதமர் டிஜிட்டல் இந்தியா வீக் 2022-ஐ தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா வீக் 2022ஐ காந்திநகரில் தொடங்கி வைத்தார். 'புதிய இந்தியாவின் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது' என்ற நோக்கத்தைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப அணுகலை மேம்படுத்துதல், எளிதாக வாழ்வதை உறுதிசெய்யும் வகையில் சேவை வழங்கலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு உதவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் இந்தியாவை அமைப்பதன் முயற்சிகளைத் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments