1. செய்திகள்

அக்ரிடெக் உட்பட 250 புத்தாக்க நிறுவனங்கள் பங்கேற்ற 'ஒளிர்' பயிற்சி பட்டறை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
'Olir' training workshop for innovative companies was held in Chennai

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN) கூட்டு முயற்சியான 'ஒளிர்' புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை, தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் கடந்த வியாழன் அன்று TIDEL பூங்காவில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM), தமிழ்நாடு நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANSAM). தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TAMCOE) ஆகிய மூன்று திறன்மிகு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு TIDEL Park இல் திறந்து வைத்தார்கள்.

இந்த திறன்மிகு மையங்கள், புத்தாக்க நிறுவனங்களின் வடிவமைப்பு முன்மாதிரி மற்றும் சோதனைகளை விரைவுபடுத்த பெரிதும் உதவுகிறது. புத்தாக்க நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களின் அதிநவீன வசதிகளை பயன்படுத்தி, தமது தயாரிப்புகளை உகந்த விலையில் விரைவாக சந்தைப்படுத்துவதற்கு இந்த 'ஒளிர்' நிகழ்வு ஏதுவாக திகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில், மேம்பட்ட உற்பத்தி, ரோபாட்டிக்ஸ், இ-வணிகம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, அக்ரிடெக், பயோடெக். மெட்டெக், ஹெல்த்டெக், எட்டெக் ஃபின்டெக் மற்றும் ஸ்பேஸ்டெக் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 நிறுவனங்கள் பங்கேற்றன.

நிகழ்வு குறித்து கிருஷ்ணன் குறிப்பிடுகையில், அரசின் பல்வேறு துறைகள் ஒன்றாகவும் மற்றும் தனியார் துறையுடன் இணைந்தும் புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு இந்த 'ஒளிர்' நிகழ்வு சான்றாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். பல மேலைநாட்டு நிறுவனங்கள் தமக்கு தேவையான பொருட்களை நம்நாட்டில் உற்பத்தி செய்கின்றன. தற்போது, இப்பொருட்களை, மீண்டும் அவர்கள் நாட்டிலேயே தயாரிக்க முயல்கின்றன. இதனைத் தவிர்க்க நாம் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய உற்பத்தி முறையை கையாள வேண்டியுள்ளது. 

இத்தகையச் சூழலில், உற்பத்தி துறையிலுள்ள புத்தாக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இந்த திறன்மிகு மையங்கள் இன்றியமையாததாக இருக்கும். மேலும், உற்பத்தி புத்தாக்க மையங்கள் மற்ற துறைகளிடமிருந்து எவ்வாறு வேறுபட்டவை என்றும் அவைகளுக்கு இந்த மூன்று திறன்மிகு மையங்களும் எவ்வாறு உதவமுடியும் என்பதனையும் குறிப்பிட்டார்.

டிட்கோ, மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன். இ.ஆ.ப.. பேசுகையில், தமிழ்நாடு தொழில்துறையின் தலைமை நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த புத்தாக்க நிறுவனங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு மாற்றாக, தொழில்முனைப்போடு புதிய புத்தாக்க மையங்களை அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

விழாவைத் தொடர்ந்து புத்தாக்க மையங்களின் நிறுவனர்கள் மற்றும் Cxo களுக்கு TANCAM, TANSAM. TAMCOE மற்றும் TICEL உயிரி தொழிற்பூங்காவில் உள்ள நவீன வசதிகளை பார்வையிட்டு அதன் செயல்முறை விளக்கங்களையும் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது 25 புத்தாக்க மையங்கள் டிட்கோவின் திறன்மிகு மையங்களுடன் அவற்றின் வசதிகளை பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொண்டனர்.

மேலும் காண்க:

குழந்தையோட நடவடிக்கையை கவனியுங்க.. ஆட்டிசம் பிரச்சினை இருக்கானு?

English Summary: 'Olir' training workshop for innovative companies was held in Chennai Published on: 17 April 2023, 10:02 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.