கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம், டில்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்டார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், ஆணையத்தின் உறுப்பினர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பங்கேற்றனர்.
30.6 டி.எம்.சி தண்ணீர்
கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி., நீரை காவிரியில் (Cauvery) இருந்து திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி., நிலுவையை உடனே திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் காவிரியில் உடனே திறக்கவும் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க
3 மாவட்டங்களில் உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெற அனுமதி!
நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு!
Share your comments