உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைப்பெறும் மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையர் அவர்களது அறிவுரைகள் படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினம் கிராம சபைக்கூட்டம் இன்று (22.03.2023) அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் இன்று கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள்_விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது:-
1) உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்
2) கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
3) கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
4) சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்
5) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல்.
6) கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) குறித்து விவாதித்தல்.
7) தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல்.
8) ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
9) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதித்தல்.
10) தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்து விவாதித்தல்.
11) பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதித்தல்.
12) அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல்.
13) சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்த விழிப்புணர்வு குறித்து விவாதித்தல்,
14) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல்.
15) பாரத்நெட் இணையதள வசதி குறித்து விவாதித்தல்.
16)இதர பொருட்கள் ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம்.
மேற்கண்ட கருப்பொருட்களின் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைப்பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தர்மபுரியினை போன்றே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைப்பெறும் என அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
100 நாள் திட்ட பணியாளர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் என்ன?
Share your comments