மாநில பாட திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு-க்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. முடிவுகள் காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்-ஆல் வெளியிடப்பட்டது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை இந்த ஆண்டு 9.12 லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களில், 8.21 அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் 90.07 % எனும் அளவில் மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93. 76% எனும் அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மேலும், தேர்வு முடிவுகளை மாணவர்கள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in முதலிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோஉ, அவர்கள் பயின்ற பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
மேலும் படிக்க: தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அதுமட்டுமின்றி, மாணவர்கள் அவர்களின் விவரங்களான பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவிட்டால் தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று 12 மணியளவில் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு
தேர்வு முடிவுகள் குறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிம் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம் அதிகம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments