பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக இதுவரையில் ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.
மத்திய அரசின் திட்டம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அமைச்சர் உறுதி
இது தொடர்பாக தஞ்சையில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் சில இடைத்தரகர்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுவரும் விசாரணையில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால், இதுவரை ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது.
தவறாக பெறப்பட்ட தொகையைத் திரும்ப பெற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் மூலம் கைது நடவடிக்கையும், துறை ரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பலர் பணி நீக்கமும், தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் களையப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களால், விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, என்பதால் தான் அவற்றை தமிழக அரசு ஆதரிக்கிறது என்றும் அமைச்சர் துரைக்கண்ணுக் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
வயலில் பதுங்கியிருக்கும் எலிகள்-கட்டுப்படுத்தக் கச்சிதமான வழிகள்!
Share your comments