PM-Kisan விவசாயிகள் பதிவினைப் புதுப்பிப்பது கட்டாயம், ஈரோடு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு, நில அளவர் - வரைவாளர் பணி: 1089 காலிப்பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம், தமிழகத்திலும் மாட்டுச்சாணத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை, ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவு முதலான செய்திகளை இப்பதிவு வழங்குகிறது.
1. PM-Kisan விவசாயிகள் பதிவினைப் புதுப்பிப்பது கட்டாயம்!
பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள் தங்களின் பதிவைப் புதுப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் உதவித் தொகை பெறும் விவசாயிகள் 12-ஆவது தவணையைப் பெறத் தங்கள் பதிவை ஜூலை 31-ஆம் தேதிக்குள் புதுபித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்தவர்களுக்கு மட்டுமே 12-ஆவது தவணை உதவித்தொகை வரும் எனக் கூறப்பட்டுகிறது. எனவே, விவசாயிகள் தவறாமல் தங்களின் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: PM kisan- விவசாயிகள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்!
2. ஈரோடு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அதனை ஒட்டிய பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் முதலான வருவாய் கிராமங்களில் அதிகளவில் காய்கறி மற்றும் பழச் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், விளைச்சலை மேம்படுத்தவும் மாநில அபிவிருத்தி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஈரோடு மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!
3. நில அளவர் - வரைவாளர் பணி: 1089 காலிப்பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிககளில் 1089 இடங்கள் காலியாக உள்ளன எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நில அளவர் பணியில் 798 இடங்களும், வரைவாளர் பணியில் 236 இடங்களும், நகர் ஊரமைப்புத் துறை அளவர், உதவி வரைவாளர் பணியில் 55 இடங்களும் உள்ளன. இவ்விடங்களூக்கு இன்று முதல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஆகஸ்டு 27-ஆம் தேதி முடிவடைகிறது. இப்பணிகளுக்கான எழுத்துதேர்வு வரும் நவம்பர் 6-ஆம் நாளில் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4. தமிழகத்திலும் மாட்டுச்சாணத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டுச்சாணம் மற்றும் பசு கோமியம் மாநில அரசால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனைப் போலவே, தமிழகத்திலும் மாட்டுச்சாணம் மற்றும் பசு கோமியத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நேற்று கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படுவது போலவே, தமிழகத்திலும் செயல்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்திலும் மாட்டுச்சாணத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
5. ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவு!
ரேஷன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை குடும்பக் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் தரமற்ற அரிசி என கண்டறிந்தால் ரேஷன் கடை பணியாளர்கள் அவற்றை தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகக் கிடங்குகளுக்குத் திருப்பி அனுப்பத் தனியாக எடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவு.!
6. புகையிலை பொருட்களின் மீது புதிய வாசகம்: மத்திய அரசு தகவல்!
சிகரெட் உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளிலும், டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பின் புதிய எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. சிகரெட் மற்றும் இதரப் புகையிலை பொருட்களுக்கான விதிகளில், மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில், 'புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்' என்ற வாசகமும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த புதிய எச்சரிக்கை புகைப்படமும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களின் மீது புதிய எச்சரிக்கும் வாசகம்: மத்திய அரசு அதிரடி!
மேலும் படிக்க
Share your comments