புதிய தொழில் தொடங்க 17.5 லட்சம் மானியக் கடன்: அரசு அறிவிப்பு, தென்னை விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு, பொலிவுறக் காட்சியுறும் மதுரை மாநாட்டு மையம், மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல், அரிசி உற்பத்தியில் 60 முதல் 70 லட்சம் டன் சரிய வாய்ப்பு: மத்திய உணவுத்துறை தகவல், தமிழகத்தில் மருத்துவபணி சிறப்பாகச் செயல்படுகிறது என புதுவை முதல்வர் ரங்கசாமி பாராட்டு ஆகிய வேளாண் சார்ந்த தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
PMEGP:புதிய தொழில் தொடங்க 17.5 லட்சம் மானியக் கடன்: அரசு அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் கூடிய நிதியுதவி பெற்று தொழில் தொடங்கும் அறிவிப்பினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (PMEGP) திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் கடனுதவி பெற்றுப் புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகளுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு!
விலை ஆதாரத் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரைத் தேங்காய்களின் கொள்முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், விலை ஆதரவு திட்டத்தின் அடிப்படையில் பந்து கொப்பரை, அரவை கொப்பரைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆதரவு விலையில் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், கொப்பரை கொள்முதல் செய்வதற்கான காலக்கெடு 31.10.2022 வரை தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
பொலிவுறக் காட்சியுறும் மதுரை மாநாட்டு மையம்!
மதுரை மாநகராட்சி, தமுக்கம் மைதானத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மதுரை மாநாட்டு மையம் காட்சியளிக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி திறந்துவைத்தார். இது சுமார் 47.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. தமுக்கம் மைதானத்தில் மொத்தமுள்ள 9.68 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2.47 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் தரைமட்டத்துக்குக் கீழ் ஒரு தளம் மற்றும் தரைத்தளம் என இரு தளங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்!
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலாவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனினும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரத் திட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானிய்ம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தியில் 60 முதல் 70 லட்சம் டன் சரிய வாய்ப்பு: மத்திய உணவுத்துறை தகவல்
அரிசி உற்பத்தியில் சுமார் 60 முதல் 70 லட்சம் டன் சரிய வாய்ப்பு உள்ளதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது. மத்திய வேளாண்மை அமைச்சகம் அறிவித்துள்ள விவரங்களின்படி, குறிப்பிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாததாலும், காரீஃப் பருவத்தில் நாட்டில் நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, அரிசி உற்பத்தியின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது எனவும், விற்கப்படும் அரிசியின் விலையில் உயர்வு ஏற்படும் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும் படிக்க
Share your comments