பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் 16ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
விவசாயிகளின் நல்வாழ்வுக்காகவும், வேளாண் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க ஏதுவாகவும், மத்திய அரசால் பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Sampada Yojana) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஒப்புதல் (Union Government Approval)
இத்திட்டத்தின் கீழ் 27 ஒருங்கிணைந்த குளிர் சங்கிலித் திட்டங்களுக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால், விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 16,200 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் கூறியுள்ளார்.
Credit: Wikipedia
இந்த 27 திட்டங்களுக்கு பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குளிர் சங்கிலித் திட்டங்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும்.
தமிழ்நாட்டில் 4 திட்டங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 7 திட்டங்களுக்கும், பீகாரில் ஒரு திட்டத்துக்கும், குஜராத்தில் 2 திட்டங்களுக்கும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 27 ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி திட்டங்கள் மூலம் ரூ.743 கோடி முதலீடுகளை ஈர்த்து, நாடு முழுவதும் நவீன, புதுமையான உள்கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அழுகக்கூடிய பொருட்களைப் பாதுகாக்கப் போதுமான உள்கட்டமைப்பை உருவாக்குவதால், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், பழங்கள் மற்றும் காய்கறித் துறையில் இந்தியாவை தற்சார்பு உடையதாக மாற்ற உதவும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விதை மற்றும் வேர் வளர்ச்சியைத் தூண்டும் தசகவ்யா - தயாரிப்பது எப்படி!
7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேப் பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு!
Share your comments