1. செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்: ரூ50,000 வீதம் முதலீடு; ரூ23 லட்சம் வருமானம்

Sarita Shekar
Sarita Shekar
Post office scheme for girls: Rs 50,000 investment; Rs 23 lakh return

சிறந்த சேமிப்பு திட்டம் :  

மகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிப்பதற்காக சுகன்யா சமிருதி யோஜனா திட்டம்  (எஸ்.எஸ்.ஒய்) 2015 இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்திய தபால் சேவையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஒரு பெற்றோர் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளின் பெயரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். நீங்கள் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ .1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.

வட்டி விகிதம்

2020 ஏப்ரல்-ஜூன் நிலவரப்படி வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றப்படும். இது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும், ஏனெனில் இது முதலீட்டில் எந்த பங்களிப்பும் இல்லாமல் கணிசமான வருமானத்தை அளிக்கும். இந்த சேமிப்பு திட்டம் 14 ஆண்டுகள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே நீங்கள் ஆண்டுக்கு ரூ .1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டு முடிவில் ரூ .14 லட்சமாக மாறும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டி சேர்க்கப்பட்டு, ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. . இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக  திரும்பப் பெறுவீர்கள்.

SSY கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?

குழந்தை பிறந்த பிறகும் இந்த சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கலாம். பெண் குழந்தைகள்  மட்டுமே சுகன்யா சமீர்த்தி கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள். கணக்கைத் திறக்கும் நேரத்தில், பெண் குழந்தை 10 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். ஒரு SSY கணக்கைத் திறக்கும்போது பெண் குழந்தையின் வயதுக்கான சான்று கட்டாயமாகும். இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் இந்த கணக்கை நீங்கள் திறக்கலாம்.

நீங்கள் பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகளில் தொடங்கலாம். இல்லையெனில் இந்த படிவத்தை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/494SSAC110315_A3.pdf இலிருந்து இந்த படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.  இது தவிர, எஸ்பிஐ( SBI) , பிஎன்பி(PNB) மற்றும் பிஓபி(POP) போன்ற பொதுத்துறை வங்கிகளின் வலைத்தளங்களிலிருந்தும் டவுன் லோடு செய்து கொள்ளலாம்.  ஐ.சி.ஐ.சி.ஐ(ICICI) வங்கி, ஆக்ஸிஸ் (AXIS) வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி போன்ற தனியார் வங்கிகளின் இணையத்தளத்தில்லிருந்தும் இதைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களை இணைத்து இந்த கணக்கைத் தொடங்கலாம்.

சுகன்யா சமிர்தி திட்டத்தில் வரி சலுகைகள்

இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படும்.

அபராதம்

ஆண்டுக்கு குறைந்தது ரூ .1000 முதலீடு செய்யத் தவறினால் சேமிப்புக் கணக்கு செயலிழந்து விடும். எனவே நீங்கள் குறைந்தபட்ச தொகையுடன் ஆண்டுக்கு ரூ .50 அபராதம் செலுத்தி மீண்டும் செயல்படுத்தலாம்.

முன் கூட்டியே பணத்தினை திரும்ப பெற முடியுமா?

பெண் குழந்தையை 18 வயதிற்குப் பிறகு மட்டுமே திரும்பப் பெற முடியும். ஆனால் அது கூட குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக நிலுவையில் உள்ள தொகையில் 50% வரை பெறலாம். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு

21 ஆண்டுகள் நிறைவடையும் போது SSY திட்டம் முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி சம்பாதிக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தை திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.

Read More:

வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!

அஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

English Summary: Post office scheme for girls: Rs 50,000 investment; Rs 23 lakh return Published on: 15 April 2021, 12:50 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.