இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுதிட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். பிஹார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தங்களின் ரேஷன் கார்டு விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவதை குறித்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் புலம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில்கொண்டு செய்யப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தங்களது சொந்த மாநிலத்தில் கிடைப்பதை போல மற்ற மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை பயோமெட்ரிக் மூலம் எந்த மாநிலத்துக்கு இடம்பெயர்கிறாரோ அங்கு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவதை குறித்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ம் கொண்டு வந்தது.இந்த திட்டத்தின் மூலம் வேறு மாநிலத்தவர்கள் தாங்கள் இடம்பெயரும் மாநிலங்களில் உணவு தானியங்களை பெறலாம். ஆனால், அந்தந்த மாநில அரசு மக்களுக்கு வழங்கும் நல திட்டங்களையோ, சிறப்பு சலுகையை பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட வேண்டும். திட்டத்தின் படி மொத்தம் 23 கோடி அட்டைகளில் 85 சதவீதம் அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை மாதம் 31க்குள் அமல்படுத்த டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!
Share your comments