தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று அரிசியின் விலை உயந்துள்ளது. நெல்தட்டுப்பாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி போன்றவற்றால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
தமிழகத்தில் குறைவாக நெல் சாகுபடி செய்யப்பட்டது, நெல் கொள்முதல் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி முதலான செயல்பாடுகளால் அரசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் இருக்கும் அனைத்து வகையான அரிசியின் விலையில் ஏற்றம் கண்டது. 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசியின் விலை ஒரு மாதத்தில் சுமார் 150 முதல் 300 வரை ஏற்றமடைந்துள்ளது.
அரிசியின் விலைநிலவரம்
- ரூ. 900 விற்ற பொன்னி அரிசி ரூ. 1200-க்கு விற்பனையாகிறது.
- ரூ. 980 விற்ற புல்லட் அரிசி ரூ. 1200-க்கு விற்பனையாகிறது.
- ரூ. 1050 விற்ற பொன்னி பச்சை அரிசி ரூ. 1250-க்கு விற்பனையாகிறது.
- ரூ. 690 விற்ற இட்லி அரிசி ரூ. 850-க்கு விற்பனையாகிறது.
- ரூ. 2200 விற்ற பாசுமதி அரிசி ரூ. 2500-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்து வருவதாலும், அதே சமயத்தில் வெளிநாடுகளுக்கு தமிழக அரிசி வகைகள் ஏற்றுமதியின் அளவு அதிகரித்து வருவதாலும் விலை அதிகரித்துள்ளது எனக் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், அவர்கள் குறிப்பிடுகையில், உடனடியாக மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். இதே நிலை நீடித்தால் தமிழகம் மற்றும் சென்னையில் அரிசியின் விலை தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவிற்கு என 1 கிலோ முதல் 5 கிலோ வரை அரிசி அன்றாடம் வாங்கி சமைக்கும் ஏழை எளிய மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
Share your comments