1.மல்பெரி பழங்கள் அமோக விளைச்சல்
கூடலூர், மசினகுடி பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் மல்பெரி செடிகள் பரவலாக பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மல்பெரி செடிகளில் பழங்கள் அமோக விளைச்சலுடன் காணப்படுகிறது. இதை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். மல்பெரி பழங்களில் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதால் பலர் விவசாயிகளிடம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
2.கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.109-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.116 ஆக அதிகரித்து உள்ளது.
3.பட்டுக்கூடுகள் 14 லட்சம் வரை விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 3,863 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.475-க்கும், குறைந்தபட்சமாக ரூ.254-க்கும், சராசரியாக ரூ.364.77-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 9ஆயிரத்து 426-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
4. தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் (The Living Greens Organics) கிரிஷி ஜாக்ரான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாடித்தோட்டம் மற்றும் தோட்டக்கலை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு எளிய அளவிலான இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் (The Living Greens Organics) இன்று கிரிஷி ஜாக்ரான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
5.கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், சேலம் விற்பனை குழு,வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் தேங்காய் பருப்பு கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவிற்கு ரூ.108.60 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் வரை செயல்பட உள்ளது.இதுவரை 54 விவசாயிகளிடமிருந்து 37 டன் தேங்காய் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பாரம்பரிய முறையில் நெல் சாகுபடி மூலம் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும்!
மாட்டுச்சாணத்தில் தயாராகும் கோயில் சிலைகள்: இயற்கை விவசாயி அசத்தல்!
Share your comments