தெருவோர வியாபார்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களூக்கு மத்திய அரசு பல்வேரு திட்டங்களின் வழியாக ரூ.1550 கோடி அளவிலான கடன்களை வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
பிரதமரின் ஸ்வநிதி யோஜனா, முத்ரா கடன் திட்டம், பசு வளர்போருக்கான கடன் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் 33,000 -க்கும் அதிகமான பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்ப்பட்டு இருக்கிறது.
ஸ்வநிதி யோஜனா திட்டத்தைப் பொருத்தவரை, பிரதமரே சுய உத்திரவாதத்தினை அளிப்பதால், பயனாளிகள் எத்தகைய உத்தரவாத நிலையும் இன்றி பெற்றுக்கொள்ளலாம் எனவும், பசு வளர்ப்போருக்கு ரூ.68 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
பல வர்த்தகம், வேளாண் தேவைகளுக்கென்று பிற கடன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதோடு, அவரவர் பகுதிகளில் வேளாண் உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்தி, விளைப்பொருட்கள் சேமிப்பு பதப்படுத்துதல் ஆலைகளை நிறுவ பெண்களூம் கடன் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதல் அளிக்கும் கருவியாக இருப்பவர்களுக்கு இத்தகைய கடன் தொகை பெரிதும் உதவும் என்று கூறினார். அதோடு, தெருவோர வியாபார்கள், பெண்கள், பசு வளர்ப்போர் உள்ளித்தவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார். இது பிற மாநிலங்களுக்கும் விரிவடையும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments